Saturday, August 1, 2015

ஜெபிப்போம் நம் ஊருக்காய்!

கர்த்தர் நம்மை நம் சொந்த ஊரில் வைத்திருந்தாலும், அயலூரில் வைத்திருந்தாலும் நாம் இரு ஊர்களுக்காகவும் ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நெகேமியாவைப் போல நம் சொந்த ஊருக்காக, பிழைக்க வந்த ஊரிலிருந்து ஜெபித்தாலும் கூட, சொந்த ஊருக்காக எதையாவது செய்ய கர்த்தர் உதவி செய்வார்.

தானியேலைப் போல பிழைக்கப் போன ஊரிலிருந்து கொண்டு ஜெபிக்கவும் நமக்கு அழைப்பு இருக்கலாம்.

திறப்பில் நிற்க, மன்றாட நாம் அணி திரள்வோம். குறிப்பாக பெயர்களைச் சொல்லி, தலைவர்களுக்காக, இடங்களுக்காக ஜெபிப்போம். பிரச்சனைகளுக்காக ஜெபிப்போம்.


உடன் ஒரே மனமுள்ள விசுவாசிகளையும் சேர்த்துக் கொள்வோம். தனியாகவும், கூட்டாகவும் ஜெபிப்போம்.


நேரம் கிடைக்கும் போது மாவட்டத்துக்காகவும் ஜெபிக்கலாம், மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும், உலகத்துக்காகவும் ஜெபிக்க மறக்க வேண்டாம்.

எருசலேமில் துவங்கி, உலகத்தின் முடிவு பரியந்தம் நமது எல்லைகள் இருக்க வேண்டும்.


அவ்வப்போது இந்தப் பக்கத்தில் சந்திப்போம். பகிர்ந்து கொள்வோம்.